இந்தியாவிற்கு ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவிற்கு ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவிற்கு ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்
Published on

இந்தியாவிற்கு 24 ‘எம்.எச்-60 ரக ரோமியோ சீஹாக்’ ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. 

அமெரிக்காவிடமிருந்து 16 ஆயிரத்து 516 கோடி ரூபாய் செலவில் 24 ரோமியோ சீஹாக் ரக ஹெலிகாப்டர்களை கடந்த ஆண்டு வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் இந்த ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், இந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசாங்கம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் வகையிலும், இந்தியா அமெரிக்காவின் நல்லுறவை வலிமைப்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இத்தகையை ஹெலிக்காப்டர்களை கொண்டு அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com