'67 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும்’ - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சுப்ரமணியன் சுவாமி

'67 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும்’ - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சுப்ரமணியன் சுவாமி

'67 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும்’ - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சுப்ரமணியன் சுவாமி
Published on

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாக கட்டக் கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். 

அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாக கட்டக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க அதற்குரிய அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அரசு தன் வசமுள்ள 67 ஏக்கர் நிலத்தை உடனடியாக ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் யாருக்கு சாதகமாக வந்தாலும் அதற்கான இழப்பீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும்‌ என்றும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com