MBBS முடித்த எட்டே மாதத்தில் UPSC தேர்வில் சாதனை தேர்ச்சி! தமிழகஅளவில் முதலிடம் பிடித்த மதுரை இளைஞர்

சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்தார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த்.
பிரசாந்த்
பிரசாந்த்PT

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளின் அடிப்படையில், ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவு 347, மாணவர்களும் ஒபிசி 303, மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ் 115,மாணவர்களும், எஸ்.சி 165, எஸ்.டி 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.

ஐஏஎஸ் பிரிவுகளுக்கு 180 பேர், ஐஎஃப்எஸ் 37 பேர், ஐபிஎஸ் பிரிவுக்கு 200 பேர், மத்திய பிரிவின் குரூப் ஏ பிரிவிற்கு 613, பேர் குரூப் பி பிரிவுக்கு 113, பேர் தேர்ச்சி அடைந்தனர்.

பிரசாந்த்
1 மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்.. எக்ஸ் தளம் அதிரடி.. ஏன் தெரியுமா?

சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்தார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருத்துவ இளங்கலை படிப்பான MBBS ஐ நிறைவு செய்த பிரசாந்த் , 8 மாதங்களில் சொந்த முயற்சியில் படித்து முதல்முறையே தமிழ்நாட்டில் முதல் இடம் பெற்றுள்ளார்.

யார் இந்த பிரசாந்த்

சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்த பிரசாந்த் சென்னை மருத்துவகல்லூரியில் படித்தவர்.

2022 ஆம் ஆண்டு ஜீன் மாதம் மருத்துவ இளங்கலை படிப்பான MBBS ஐ நிறைவு செய்த பிரசாந்த் , வெறும் 8 மாதங்களில் சொந்த முயற்சியில் படித்து முதல்முறையே தமிழ்நாட்டில் முதல் இடம் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரசாந்த் குடும்பத்துடன் சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். பள்ளிப்படிப்பை கோபாலபுரம் DAV பள்ளியில் முடித்த இவருக்கு ஆசியாவின் பழமையான கல்லூரியில் ஒன்றான சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

2022 ஜூன் மாதம் 36 தங்கப் பதக்கங்களுடன் MBBS ல் தமிழ்நாடு அரசின் விருதுடன் சிறந்த மருத்துவராக பட்டம் பெற்றார் பிரசாந்த். இவர் பெற்ற 36 பதக்கங்களுக்காக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

அதன் பிறகு 2022 ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி முதல் சொந்த முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான இவர், ஒரே முயற்சியில் இந்திய அளவில் 78 ஆவது இடத்தையும் தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

அகாடமிகளுக்கு சென்று படிக்கவில்லை எனினும் அகாடமிகளின் வழிகாட்டுதலை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் மருத்துவத்தை ஒரு துணைப் பாடமாக எடுத்தவர்கள் இந்திய அளவில் 100 இடங்களுக்குள் இதுவரை பெற்றதில்லை என்பதை தவிடுபொடியாக்கி, தனது 78 ஆவது இடத்தின் மூலம் புதிய சாதனையை உறுவாக்கி இருக்கிறார் பிரசாந்த்.

தனது தாய், பாட்டி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாகக் கூறும் பிரசாந்த், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த உறுதுணை என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com