\
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு 27வது இடம்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு 27வது இடம்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு 27வது இடம்
Published on

2017 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27 வது இடம்  பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கீர்த்திவாசன், திருச்சி என்.ஐ.டி.,யில் படித்தவர்
.
சென்னையை சேர்ந்த மதுபாலன் தமிழக அளவில் இரண்டாமிடம்  பிடித்துள்ளார். இந்திய அளவில் 71 வது இடம் பிடித்தார். தமிழகத்தில் இருந்து, 104 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். அதில், 60 க்கும் அதிகமான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு எழுதிய 13,000 பேரில் 2567 பேரில் தேர்ச்சி பெற்றனர். அதனையடுத்து, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற நேர்முகத்தில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். யூபிஎஸ்சி இணையதளத்தில் இன்று நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com