உ.பி| ஜான்பூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த வாகனத்தால் சலசலப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில், திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த வாகனத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

ஜான்பூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனை அடுத்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு 11 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் மினிலாரி ஒன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்றுள்ளது. இதனால் முறைக்கேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறு சமாஜ்வாடி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற ஆட்சியர், வாக்குப்பதிவு நேரத்தில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால், அதை மாற்றுவதற்காக கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அந்த மாற்று இயந்திரங்களை தவறுதலாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவந்ததாக விளக்கமளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com