6738 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 லட்சம் ரெம்டெசிவிர் - இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த உதவிகள்!

6738 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 லட்சம் ரெம்டெசிவிர் - இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த உதவிகள்!

6738 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 லட்சம் ரெம்டெசிவிர் - இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த உதவிகள்!
Published on

பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் நன்கொடையாக அளிக்கும் கொரோனா நிவாரண பொருட்களை, மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பெற்று வருகிறது. மொத்தம் 6738 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3856 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 16 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 4668 வென்டிலேட்டர்கள், சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.

'கனடா, தாய்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா அமெரிக்காவின் ஜிலெட், சேல்ஸ்போர்ஸ், தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் அமைப்பு ஆகியவற்றிடமிருந்து மே 8ம் தேதி வந்த முக்கிய பொருட்கள்: ஆக்சிஜன் செறிவூட்டிகள் 2404; ரெம்டெசிவிர் 25,000; வென்டிலேட்டர்கள் 218; பரிசோதனை கருவிகள் 6,92,208.

இந்த பொருட்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இவற்றை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

வெளிநாட்டு உதவியாக மருத்துவ சாதனங்கள் அனுப்பிய அனைவருக்கும் புதுடெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பேராசிரியர் ரந்தீப் குலேரியா நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை 80 வென்டிலேட்டர்கள், 80 ட்ராலிகள், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1 லட்சம் முககவசங்கள், 5000 அறுவை சிகிச்சை உடைகள் வெளிநாட்டு நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக போபால் எய்ம்ஸ் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சர்மன் சிங் தெரிவித்தார். 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 64 ஜம்போ சிலிண்டர்கள் பெற்றதாக ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் நிதின் நகர்கர் தெரிவித்தார்.

வெளிநாட்டு கொரோனா நிவாரண பொருட்களை பெற்று அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு பிரிவு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டு கடந்த 2ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com