இரட்டை பெண் குழந்தைகளை குளத்தில் வீசிய தாய் !

இரட்டை பெண் குழந்தைகளை குளத்தில் வீசிய தாய் !

இரட்டை பெண் குழந்தைகளை குளத்தில் வீசிய தாய் !
Published on

இரட்டை பெண் குழந்தைகளை குளத்தில் போட்டுவிட்டு தொலைந்து போனதாக பெண் நாடகம் ஆடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் நசிமா. இவருக்கும் வசீம் என்பவருக்கும் திருமண நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. கணவர் வசீம் வேலைக்கு செல்லாததால், அவருக்கும் மனைவி நசிமாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு வளர்ப்பது என்று மனைவி நசிமாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இவர் தனது இரட்டை குழந்தையை கிராமத்திலுள்ள குளத்தில் போட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இவர் தனது குழந்தைகளை குளத்தில் போட்டுள்ளார். பின்னர் இவர் கிராமத்தினரிடம் தனது குழந்தையை காணவில்லை என்று நாடகம் ஆடியுள்ளார். இவரும் அவரது கணவர் வசீமும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இறுதியில் வசீம் மற்றும் நசிமாவிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இந்த விசாரணையில் நசிமா குழந்தைகளை குளத்தில் போட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குளத்தில் குழந்தைகளின் உடல் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளின் சடலத்தை காவல்துறை மீட்டனர். அத்துடன் இந்த தம்பதிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com