திருமண விழாவில் நடனத்தை நிறுத்திய பெண் - துப்பாக்கியால் சுட்ட நபர்

திருமண விழாவில் நடனத்தை நிறுத்திய பெண் - துப்பாக்கியால் சுட்ட நபர்

திருமண விழாவில் நடனத்தை நிறுத்திய பெண் - துப்பாக்கியால் சுட்ட நபர்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சுடப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரக்கூட் பகுதியில் நடைபெற்ற கிராம தலைவரின் திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த ஒரு பெண், திடீரென தனது நடனத்தை நிறுத்தினார். அப்போது அங்கு குடிபோதையிலிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணின் முகத்தில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், உடனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மணமகனின் உறவினர்கள் சிலரும் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com