மாதவிடாய்
மாதவிடாய்கோப்புப்படம்

உத்தரப்பிரதேசம்: சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த கொடுமை!

சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிற்க வைத்த கொடுமை உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
Published on

சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிற்க வைத்த கொடுமை உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இதை உணர்த்த மாதவிடாய் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவையாவும் சம்பந்தப்பட்டவர்களை முழுமையாக சென்று சேரவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதை நாங்கள் அழுத்திச்சொல்லும் வகையிலான ஒரு சம்பவம்தான் உ.பி.யில் நடந்துள்ளது.

சம்பவத்தின்படி உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வரும் பெண்கள் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் (மாணவியின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) கடந்த சனிக்கிழமை தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார்.

சானிட்டரி நாப்கின்
சானிட்டரி நாப்கின்

அப்போது அவருக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த அந்த மாணவி ஆசிரியையிடம் சானிட்டரி நாப்கின் வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார்.

ஆனால் ஆசிரியை அம்மாணவிக்கு உதவுவதற்கு பதிலாக அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றி ஒரு மணிநேரம் நிற்கவைத்துள்ளார். இதில் அப்பெண்ணிற்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அம்மாணவி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதை அடுத்து அப்பெண்ணின் தந்தை, மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர்களிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவிக்கு நடந்த சம்பவம் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து சம்பந்தபட்ட பள்ளி மீதும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய்
மாதவிடாய்

இத்தகைய சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் சுகாதார மேலாண்மையைச் சுற்றியுள்ள சவால்களை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மற்ற பள்ளிகளில் ஏற்படாமல் இருக்க, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டிய தேவையும், பள்ளியிலேயே இலவச நாப்கின் வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com