\
யோகி ஆதித்யநாத் போல ஹேர்ஸ்டைல்: மாணவர்களை நிர்பந்திப்பதாக புகார்

யோகி ஆதித்யநாத் போல ஹேர்ஸ்டைல்: மாணவர்களை நிர்பந்திப்பதாக புகார்

யோகி ஆதித்யநாத் போல ஹேர்ஸ்டைல்: மாணவர்களை நிர்பந்திப்பதாக புகார்
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு விநோதமான உத்தரவை பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல முடிதிருத்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதிக்க மாட்டோம் என பள்ளி நிர்வாகம் கூறியதாக பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் பள்ளி நிர்வாகமோ, நாகரிகமான முறையில் முடிதிருத்தம் செய்ய வேண்டும் என்றே தாங்கள் கூறியதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போலத் தான் முடிதிருத்தம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com