ஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..?

ஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..?

ஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..?
Published on

உத்தரப்பிரதேச வரலாற்றில் 'அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கும் மாவட்டம்' என்ற சிறப்பைப் பெற்றது உன்னாவ். லக்னோவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உன்னாவ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் மாவட்டமாகும். சுமார் 31 லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த மாவட்டம் தங்கப் புதையல் நிறைந்த பகுதி என நம்பப்படுகிறது. 

சிப்பாய்க் கலகத்தின்போது உன்னாவில் உள்ள ஒரு கோட்டையில் ஆயிரம் டன் தங்கக் கட்டிகள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு அடையாளங்களைப் பெற்றிருக்கும் உன்னாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 86 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தில் இருந்து பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 185 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

இவை பெரும்பாலும் உன்னாவில் உள்ள அசோஹா, அஜ்கெய்ன், மக்கி மற்றும் பங்கர்மாவ் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் அல்லது தலைமறைவாகி உள்ளனர். உன்னாவ் நகரில் காவல்துறையினர், அரசியல் தலைவர்களின் அனுமதி இல்லாவிட்டால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டார்கள் என்பதே அங்குள்ள மக்களின் குற்றச்சாட்டு. இந்த அணுகுமுறை குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com