அறையில் அடைத்துவைத்து பெண்ணை கொடூரமாக தாக்கும் காவலர்... ஜன்னல் வழியே கதறிய குடும்பம்

அறையில் அடைத்துவைத்து பெண்ணை கொடூரமாக தாக்கும் காவலர்... ஜன்னல் வழியே கதறிய குடும்பம்
அறையில் அடைத்துவைத்து பெண்ணை கொடூரமாக தாக்கும் காவலர்... ஜன்னல் வழியே கதறிய குடும்பம்

உத்தரப்பிரதேசத்தில் பூட்டிய அறைக்குள் காவலர் ஒருவர் இளம்பெண்ணை தாக்கும் வீடியோவை பகிர்ந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பாஜக தலைமையிலான ஆளும் கட்சியை சாடியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரின் கக்வாண் (Kakwan) பகுதியில், இளம் பெண் ஒருவரை காவலர் ஒருவர் உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த அறையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர், அந்தப் பெண்ணை பிடித்து வைத்துள்ளது போல் தெரிகிறது.

வெளியே இருந்தவர்கள், கதவைத் திறக்கும்படி காவலரிடம் கேட்கிறார்கள். இதற்கிடையில், அந்தப் பெண் தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிப்பது வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி இந்தக் கொடூரை வீடியோவை பகிர்ந்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளது. அதில் "கான்பூர் காவல்துறையின் வெட்கக்கேடான செயல் இது. குடிமக்கள் மீது யோகி அரசின் காவல்துறை அட்டூழியங்கள் செய்யும் வீடியோக்கள் தினமும் வெளிவருகின்றன. ஆனால் முதல்வர் மௌனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தை விசாரித்து காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com