\
உத்தரப் பிரதேசம்: பயங்கரவாதத்திற்கு சதித் திட்டம்? கைதான இருவரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேசம்: பயங்கரவாதத்திற்கு சதித் திட்டம்? கைதான இருவரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேசம்: பயங்கரவாதத்திற்கு சதித் திட்டம்? கைதான இருவரிடம் தீவிர விசாரணை
Published on

உத்தரப் பிரதேசத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் அம்மாநில தீவிரவாத செயல்கள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோவில் கைது செய்யப்பட்ட மசூரூதீன் மற்றும் மிநாஜ் அஹமத் ஆகிய இருவரையும் இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி அளித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் அளித்த தகவல் அடிப்படையில் மேலும் ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் உத்தரப் பிரதேச போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த வழக்கின் உண்மை தன்மை குறித்து சந்தேகங்கள் இருப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com