எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை பாழாக்கிய அமைச்சரின் துப்பாக்கி

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை பாழாக்கிய அமைச்சரின் துப்பாக்கி

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை பாழாக்கிய அமைச்சரின் துப்பாக்கி
Published on

உத்தரபிரதேசத்தில் அமைச்சர் சத்யதேவ் பச்சூரி துப்பாக்கி சிக்கி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சேதம் அடைந்தது. 

உத்தரபிரதேச மாநில பாஜக ஆட்சியில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருப்பவர் சத்யதேவ் பச்சூரி. காதி, கிராமிய கைத்தொழில், பட்டு வளர்ப்பு, ஜவுளி, சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் அமைச்சராக பச்சூரி உள்ளார். ஹார்டோவில் பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய பச்சூரி திடீரென மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறினார். உடனடியாக அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரின் ஆடைக்குள் இருந்த கைத்துப்பாக்கி எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதடைந்தது. விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் கூறியும், விதிமுறைகளை மீறி அமைச்சரின் ஆட்கள் செயல்பட்டதாலே இந்த இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com