திருமணமாகி நான்கு வருடங்களாகியும் மனைவி கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவன் அவரை 2வது மாடியில் இருந்து தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மொரதாபாத்தில் திருமணமாகி நான்கு வருடம் ஆகியும் கர்ப்பமாகவில்லை என்பதால் கணவனுக்கும் மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் நேற்று தான் வசித்து வந்த வீட்டின் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் கால்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து போலீசார் மூன்று துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் துப்பாக்கியை வைத்து அவர் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார் எனவும் வரதட்சணைக் கேட்டும் சண்டையிட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கியின் அடிப்பகுதியை வைத்து அவரது மனைவியின் தலையில் தாக்கி பின்னர் ஜன்னல் வழியாக கீழே தள்ளி விட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.