இந்தியா
’குடிக்காதீங்க’ என்று சொன்னதால் தலாக்: தவிக்கும் பெண்
’குடிக்காதீங்க’ என்று சொன்னதால் தலாக்: தவிக்கும் பெண்
கணவரை குடிக்க வேண்டாம் என்று கூறியதற்காக, பெண்ணுக்கு தலாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசிக்கும் அந்த பெண், கணவரின் குடிப்பழக்கத்தால் தினம் அவதிக்கு ஆளாகி வந்ததாகத் தெரிகிறது. இதனால், கணவரை குடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துவிட்டார் என்று, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தலாக் கூறியதால், குழந்தையுடன் தற்போது பெற்றோர் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார். தலாக் நடைமுறையால் பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், குடியை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதற்காக தலாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.