இந்தியா
சாலை விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் - உ.பி அரசு
சாலை விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் - உ.பி அரசு
உத்தரபிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுதீக்ஷா பாட்டி. இவர் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் உதவித்தொகைப் பெற்று பாப்சன் கல்லூரியில் படித்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தார். ஆகஸ்ட் 10ஆம் தேதி புலாந்த்ஷஹர் மாவட்டத்தில் தனது உறவினருடன் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவருடைய குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யானந்தை நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து சுதீக்ஷாவின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் இழப்புத்தொகை கொடுத்துள்ளார்.
மேலும் அவர் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க நினைவாக நூலகம் மற்றும் நினைவுச்சின்னம் அமைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.