இந்தியா
உ.பி. பாலியல் வன்கொடுமை - சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு
உ.பி. பாலியல் வன்கொடுமை - சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
3 பேர் கொண்ட இந்த விசாரணை குழுவிற்கு மாநில உள்துறை செயலர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள முதல்வர், வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கவும் ஆணையிட்டுள்ளார்