விலை வீழ்ச்சி அடைந்ததால் உத்தரப்பிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக்கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக் கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.