இந்தியா
“நாட்டின் தேசிய மதம் சனாதன தர்மம்” - உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு!
“சனாதன தர்மம் என்பது நாட்டின் தேசிய மதம்” என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து சனாதனத்தை அவமதித்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்விகேட்க முடியாது.

yogipt web
சனாதன தர்மம் இந்தியர்களின் கலாசார அடையாளமாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செல்வோர், அங்கு இந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்” என தெரிவித்தார்.