இந்தியா
உ.பியில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்; மருத்துவக் கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது
உ.பியில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்; மருத்துவக் கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது
உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவ கல்லூரி முதல்வரும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மூளை பாதிப்பால் சுமார் 70 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ராஜிவ் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்பட்ட பின் பதவி விலகினார். இந்நிலையில் ராஜிவ் மிஸ்ராவும், அவருடைய மனைவி பூர்ணிமாவும் வக்கீல் ஒருவருடன் ஆலோசனை நடத்தச் சென்றபோது சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பின்னர் கோரக்பூர் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.