தெலங்கானா போலீசாரின் உதவியினால் 5 ஆண்டுகளுக்குபிறகு குடும்பத்தோடு இணைந்த உ.பி சிறுவன்

தெலங்கானா போலீசாரின் உதவியினால் 5 ஆண்டுகளுக்குபிறகு குடும்பத்தோடு இணைந்த உ.பி சிறுவன்
தெலங்கானா போலீசாரின் உதவியினால் 5 ஆண்டுகளுக்குபிறகு குடும்பத்தோடு இணைந்த உ.பி சிறுவன்

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஹண்டியா பகுதியை சேர்ந்த சிறுவன் சோனி கடந்த 2015, ஜூலை 15 அன்று காணாமல் போயுள்ளார். அப்போது அவருக்கு எட்டு வயது. 

உடனடியாக சோனியின் பெற்றோர் அருகே இருந்த காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீசாரும் சோனியின் போட்டோவை இந்தியா முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளனர். 

போலீசார் கடந்த ஐந்து வருடங்களாக காணாமல் போன சோனியை தேடி வந்த நிலையில் தெலங்கானா போலீசார் காணமால் போன குழந்தைகளை முக ஒற்றுமையின் மூலம் கண்டறியும் வகையில் வடிவமைத்திருந்த DARPAN  facial recognition tool மூலம், சோனி அசாமில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக இருப்பதை கண்டறிந்ததும் உ.பி போலீசாருக்கு தகவலை சொல்லியுள்ளனர்.

அதனையடுத்து அந்த சிறுவனை அடையாளம் காண சென்ற சோனியின் பெற்றோருக்கு அது சோனி தான் என தெரிந்ததும் மகிழ்ச்சி அடைத்து தங்கள் செல்ல மகனை ஆரத்தழுவி கொண்டனர். 

தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்திய தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது. இப்போது சோனியும், அவரது பெற்றோரும் ஹேப்பியாக உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com