பிட் அடிக்க விடாமல் கெடுபிடி... உ.பி. பள்ளிகளில் குறைந்தது தேர்ச்சி

பிட் அடிக்க விடாமல் கெடுபிடி... உ.பி. பள்ளிகளில் குறைந்தது தேர்ச்சி

பிட் அடிக்க விடாமல் கெடுபிடி... உ.பி. பள்ளிகளில் குறைந்தது தேர்ச்சி
Published on

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் 385 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவ- மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கௌசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளில் எந்தவொரு மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல மேல்நிலைப் பள்ளி தேர்வில் அலிகார், மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகள் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதனிடையே பள்ளி தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநரான வினய் குமார் கூறியுள்ளார். அதனால் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பை பொருத்தவரை 50 அரசு பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 84 தனியார் பள்ளிகளும் 0 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com