கொரோனா நிலைபற்றி பேசினால் என்னையும் தேசத்துரோகி என்பார்கள் - உ.பி பாஜக எம்.எல்.ஏ

கொரோனா நிலைபற்றி பேசினால் என்னையும் தேசத்துரோகி என்பார்கள் - உ.பி பாஜக எம்.எல்.ஏ
கொரோனா நிலைபற்றி பேசினால் என்னையும் தேசத்துரோகி என்பார்கள் - உ.பி பாஜக எம்.எல்.ஏ

கொரோனா நிலைபற்றி பேசினால் என்னையும் தேசத்துரோகி என்பார்கள் என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

கொரோனா நிலைமையை உத்தரபிரதேச மாநில அரசு கையாள்வது குறித்து ஆளும் கட்சியின் சில தலைவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.  ராகேஷ் ரத்தோர், அதிகம் பேசினால் தான்தேசத்துரோககுற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

சீதாபூரில் ராகேஷ் ரத்தோரிடம் பத்திரிகையாளர்கள், “கொரொனா பாதிப்புகள் அதிகரித்து, அதிக படுக்கைகள் தேவைப்பட்டாலும், சீதாப்பூர் மாவட்டத்தில் ஒரு சிகிச்சை மையம்கூட ஏன் இன்னும் செயல்படவில்லைஎன்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், “ எங்கள் நிலை எப்படி உள்ளது என்றால், நாங்கள் எம்.எல்.ஏக்கள். அதிகம் பேசினால், நாங்களும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நான் என் உணர்வுகளை முன்பு தெரிவித்துள்ளேன், நான் இனி பேசாதது நல்லதுஎன தெரிவித்தார்.

பொதுமுடக்கம் ஏன் கண்டிப்பாக அமல்படுத்தப்படவில்லை என்று கேட்டபோது, “எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இதை விட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. நான் அரசாங்கம் அல்ல, ஆனால் அரசாங்கம் சொல்வதை சரியானது என்று உங்களுக்கு சொல்ல முடியும்எனக்கூறினார்.

முன்னதாக ராகேஷ் ரத்தோர், முதல் அலையின்போது பிரதமர் தீபம் ஏற்றி, ஒலி எழுப்ப சொன்னதை கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் அவர் தனது பகுதியில் உள்ள உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் நிலைமை குறித்து  கேட்டவரிடம்ராம ராஜ்யம்ஏற்கனவே வந்துவிட்டதாக கிண்டல் தொணியில் போனில் பேசியது வைரலாகியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com