ரூ.200 குத்தகைக்கு வாங்கிய நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் வைரம்: விவசாயிக்கு 'ஜாக்பாட்'!

ரூ.200 குத்தகைக்கு வாங்கிய நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் வைரம்: விவசாயிக்கு 'ஜாக்பாட்'!

ரூ.200 குத்தகைக்கு வாங்கிய நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் வைரம்: விவசாயிக்கு 'ஜாக்பாட்'!

உத்தரபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த விவசாயி லகான் யாதவ், 200 ரூபாய்க்கு குத்தகைக்கு வாங்கிய நிலத்தை தோண்டியபோது 60 இலட்ச ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கண்டெடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 45 வயதான விவசாயி லகான் யாதவ், கடந்த மாதம் ரூபாய் 200க்கு குத்தகைக்கு எடுத்த 10x10 பேட்ச் நிலத்தில் தனது தீபாவளி வெளிச்சத்தை கண்டுபிடித்துள்ளார். தான் வாங்கிய இடத்தில் அவர்  தோண்டியெடுத்த 'கூழாங்கல்' 14.98 காரட் வைரமாக மாறியது, இது ரூ .60.6 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

லகான் யாதவ் இந்த இடத்தை தோண்டியெடுத்து மண்ணில் கிடந்த கற்கள் மற்றும் கூழாங்கற்களை அலசியபோது , வித்தியாசமாகத் தெரிந்த ஒன்றைக் கண்ட தருணத்தை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார். கூலாங்கல் போல இருந்த அதிலிருந்து தூசியைத் தேய்த்தபோது அது பிரகாசித்தது. அந்த கல்லை இதயத்தோடு மார்பில் சுற்றிக் கொண்டு, அதை மாவட்ட வைர அதிகாரியிடம் எடுத்துச் சென்றிருந்தார், அது வைரம்தான் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வைரத்தின் மதிப்பு 60 இலட்ச ரூபாய்.

மில்லியனராக இருப்பது எப்படி இருக்கிறது என்று யாதவிடம் கேட்டபோது அமைதியான சிரிப்பை உதிர்த்தபடி “நான் பெரிய விஷயங்களை சொல்லமாட்டேன். நான் படித்த நபர் அல்ல, எனது நான்கு குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக பணத்தை வங்கியில் “பிக்ஸிட் டெபாசிட்” செய்து வைப்பேன்” என கூறினார்.

முன்பு கிராமங்கள் அகற்றப்பட்டபோது பன்னா தேசிய பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இழப்பீட்டுப் பணத்துடன் வாங்கிய 2 ஹெக்டேர், இரண்டு எருமைகள் வைத்துள்ளதுடன், இப்போது அவர் ஒரு மோட்டார் சைக்கிளும் வைத்திருக்கிறார். தற்போது கிடைத்த வைரத்தை மாவட்ட நிர்வாகியிடம் டெபாசிட் செய்தபின்னர் முதல்கட்டமாக ரூ .1 லட்சம் தொகை வாங்கினார். “எனது மருமகன்கள் வற்புறுத்தியதால் நான் மோட்டார் சைக்கிள் வாங்கினேன். எனது மிதிவண்டியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன், மீண்டும் நிலத்தை தோண்டுவதற்கு திட்டமிட்டுள்ளேன். இன்னொரு வைரத்தைப் பெறுவேன் என்று நம்புகிறேன்.”என்று அவர் கூறினார்.

இந்த தீபாவளி பன்னாவிற்கு வருபவர்களுக்கு ஒரு உண்மையான பிரகாசத்தை வழங்கி வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட நான்கு ஆண்கள், 10 நாட்களில் தலா ஒரு வைரத்தை தோண்டி எடுத்துள்ளனர். சனிக்கிழமை வரை கிடைத்த இந்த வைரங்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்புடையவை, இவை  பன்னாவில் ஏலம் விடப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com