’நீ எனக்கு 7-வது மனைவி’: விளையாட்டாக உளறிய கணவர் கைது!

’நீ எனக்கு 7-வது மனைவி’: விளையாட்டாக உளறிய கணவர் கைது!

’நீ எனக்கு 7-வது மனைவி’: விளையாட்டாக உளறிய கணவர் கைது!
Published on

தனது கணவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக மனைவி கூறியதை அடுத்து அந்தக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது கணவர் என்னிடம் விளையாட்டாக பேசுவதாக எண்ணி, நீ என்னுடைய 7வது மனைவி எனக் கூறினார். இதனால் சந்தேகமடைந்த நான், அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் விசாரித்தேன். அப்போதுதான் அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்த தகவல் எனக்கு தெரியவந்தது. அவளிடம் நீ என் 9 வது மனைவி எனக் கூறியுள்ளார்’ என்றார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் தனது மனைவியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். நான் மூன்று திருமணங்கள் மட்டும்தான் செய்துள்ளேன். எனது மனைவி நான் விளையாட்டாகக் கூறியதை தீவிரமாக எடுத்துக்கொண்டார். எனது முதல் மனைவி மூலம் எனக்கு 3 மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் தெரிவித்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரில் தனக்கு தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது நிறைய திருமணங்கள் நடைப்பெற்றுள்ளதாகக் கூறுகிறார். இதுதொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com