9 ம் வகுப்பு மாணவி பள்ளி மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவியை பள்ளியின் மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தெயோரியா மாடர்ன் சிட்டி பள்ளியில் பயின்று வந்த 9-ம் வகுப்பு மாணவியை பள்ளியின் 3வது மாடியிலிருந்து யாரோ சிலர் தள்ளிவிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், பள்ளி மாணவர்கள் வந்து கூறியதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்தார். மேலும், தனது மகளை மர்ம நபர்கள் யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக மாணவி தெரிவித்ததாக அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.