\
மதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது

மதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது

மதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது
Published on: 

லக்னோவில் உள்ள ஒரு மதரஸாவின் மேலாளர் அங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு மதரஸாவில் மேலாளர் ஒருவரால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சில சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மேலாளரை கைது செய்தனர். அந்த மதராஸில் 125 பெண்கள் பயின்று வந்ததாகவும். காவல்துறையினர் சென்ற போது அங்கு 51 பெண்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்ற காவலர்கள் இதுதொடர்பாக குழந்தைகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

’இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிகுழு அமைக்கப்பட்டது. மதரஸாவில் உள்ள பிற மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்துள்ளோம்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com