\

வாக்கு இயந்திரங்களை பத்திரமாக பாதுகாக்கும் குரங்குகள்..!

வாக்கு இயந்திரங்களை பத்திரமாக பாதுகாக்கும் குரங்குகள்..!
Published on: 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு குரங்குகளின் உதவி நாடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது மொராதாபாத் பகுதியில் வாக்குச் சாவடிகளில் குரங்குகளின் அட்டகாசம் இருந்ததால், வாக்காளர்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மொராதாபாத் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கும் குரங்குத் தொல்லை அதிகம் என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த, பயிற்சி அளிக்கப்பட்ட குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கல்லூரி அருகே வரும் குரங்குகளை விரட்டியடிக்க, இந்தக் குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com