\
பல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்

பல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்

பல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகம், கல்லூரிகளில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வி துறை சார்பில் அம்மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின்படி கல்லூரிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் பணிப்புரியும் பேராசிரியர்களும் கல்லூரி வளாகத்தில் மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தலின் மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒரு நல்ல படிக்கும் சூழல் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் அதிக நேரத்தை மொபைல் போன் உடன் செலவு செய்வதால் படிக்கும் நேரம் மிகவும் குறைந்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநில கேபினெட் கூட்டங்களில் மொபைல் போன் பயன்பட்டை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com