தடுப்பூசி செலுத்தாதவர்களால் கொரோனா பரவும் அபாயம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி செலுத்தாதவர்களால் கொரோனா பரவும் அபாயம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி செலுத்தாதவர்களால் கொரோனா பரவும் அபாயம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் ஒரே இடத்தில் அருகருகே இருந்தால் ஏற்படும் விளைவை கண்டறியும் வகையில், கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்களால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக, ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் நெருங்கியிருக்கும்போது, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பரவுவதாக தெரிவிக்கின்றனர். தடுப்பூசி போடாமால் இருப்பது தனிநபர் விருப்பம் என வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com