உன்னாவ் பாலியல் வழக்கு டெல்லிக்கு மாற்றம்.. 25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் டெல்லி நீதிமன்றத்தில், இந்த வழக்கை தினசரி விசாரித்து 45 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். மேலும் இந்தப் பெண்ணின் விபத்து தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த பெண்ணிற்கு தற்காலிக நிவாரண தொகையாக உத்தரப்பிரதேச அரசு 25 லட்சம் ரூபாயை அளிக்கவேண்டும். அத்துடன் இந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

