\
உன்னாவ் பெண் வழக்கில் தீர்ப்பு : எம்எல்ஏ குல்தீப்சிங் குற்றவாளி என அறிவிப்பு

உன்னாவ் பெண் வழக்கில் தீர்ப்பு : எம்எல்ஏ குல்தீப்சிங் குற்றவாளி என அறிவிப்பு

உன்னாவ் பெண் வழக்கில் தீர்ப்பு : எம்எல்ஏ குல்தீப்சிங் குற்றவாளி என அறிவிப்பு
Published on: 

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி தீஸ் ஹசாரே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உன்னாவ் பெண்ணை கடத்தி எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து போராடி வந்தார்.

இந்நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் மட்டுமின்றி, குற்றத்தை மறைக்க முயன்றதற்கும் சேர்த்து தீர்ப்பு வரும் என்பதால் தண்டனை கடுமையாக இருக்கலாம் எனப்படுகிறது. அவருக்கான தண்டனைகள் குறித்த வாதங்கள் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com