உன்னாவ் விவகாரம்: பாஜக எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி வழக்கு!

உன்னாவ் விவகாரம்: பாஜக எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி வழக்கு!
உன்னாவ் விவகாரம்: பாஜக எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி வழக்கு!

உத்தப்பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சாலை விபத்தில் படுகாயமடைந்தது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. அம்மாநில பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் கூறினார். அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க, சென்றபோது, அவரை எம்.எல்.ஏ குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற அவரது தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண்ணும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர, பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின. விபத்தை ஏற்படுத்திய லாரியின் பதிவெண் கிரீஸ் பயன்படுத்தி மறைக்கப்பட்டிருந்ததால் அது திட்டமிட்ட கொலை முயற்சி என குற்றம்சாட்டப்படுகிறது. எனினும் காவல்துறையினர் இதை மறுத்துள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குல்தீப் செங்கார், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com