அன்லாக் 4.0: புதிய தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. முழு விவரம்..!

அன்லாக் 4.0: புதிய தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. முழு விவரம்..!

அன்லாக் 4.0: புதிய தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. முழு விவரம்..!
Published on

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “செப்டம்பர் 30 ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், போன்றவற்றை திறக்க தடை தொடரும். செப்டம்பர் 21க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50% ஆசிரியர்கள், பணியாளர்களை அழைக்கலாம். செப்டம்பர் 7 முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்30 ஆம் தேதிவரை முழு பொதுமுடக்கம் தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை மாநில அரசு அமல்படுத்த கூடாது.

 செப்டம்பர் 21 முதல் 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். செப்டம்பர் 21 முதல் திறந்த திரையரங்குகள், திறந்த கலையரங்குகள் இயங்கலாம்.

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல. மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com