பல்கலைக்ழக துணைவேந்தரை திட்டி வைரலான வீடியோ - கைதான மாணவர்!

பல்கலைக்ழக துணைவேந்தரை திட்டி வைரலான வீடியோ - கைதான மாணவர்!
பல்கலைக்ழக துணைவேந்தரை திட்டி வைரலான வீடியோ - கைதான மாணவர்!

மேற்கு வங்கத்தின் அலியா பல்கலைக்கழக துணைவேந்தரை மாணவர்கள் குழு கசப்பான வார்த்தைகளால் வசைபாடிய வீடியோ வைரலானதை அடுத்து, தற்போது ஆளுநர் அறிவுறுத்தலை அடுத்து மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முகமது அலி அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரது அறைக்குள் நுழைந்த மாணவர்கள் குழு அநாகரிகமான முறையில் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்களின் பரிந்துரைகளின்படி பிஎச்டி சேர்க்கை பட்டியலை மாற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளனர். அவரை சூழ்ந்துகொண்டு மாணவர்கள் தகுதி பட்டியலில் நிர்வாகம் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டினர்.

பல்கலைக்கழகத்தை "அழிக்கிறார்" என்று துணைவேந்தர் மீது மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு பாதுகாவலர்கள் துணைவேந்தர் அறையில் இருந்த போதும் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மௌனமாக இருந்த துணைவேந்தர் தனது தொலைபேசியைத் திரும்பக் கேட்டதும் அதை மாணவர்கள் குழு பறித்துள்ளது. நிகழ்ந்த சம்பவம் முழுவதையும் மாணவர்கள் குழு தங்கள் மொபைலில் படம்பிடித்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் அந்த வீடியோவை “இது வெட்கக் கேடான செயல்” என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தமக்கு அறிக்கை அளிக்குமாறும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாநில தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் தங்கர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் குழுவின் தலைவர் கியாசுதீன் மொண்டல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் பணியாற்றி 2018 ஆம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com