"பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள்தான் இருக்க வேண்டும்... பீரங்கி எதற்கு?"

"பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள்தான் இருக்க வேண்டும்... பீரங்கி எதற்கு?"

"பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள்தான் இருக்க வேண்டும்... பீரங்கி எதற்கு?"
Published on

ஜேஎன்யூ வளாகத்தில் பீரங்கியை வைக்க வேண்டும் என்ற துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரின் கோரிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள்தான் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள மாணவர்கள் பீரங்கி எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது. அதில், மத்திய ஆமைச்சர்கள் தர்மேந்திரா பிரதான், வி.கே.சிங் ஆகியோர் ‌பங்கேற்றனர். அப்போது, பேசிய ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெகதீஷ்குமார், பல்கலைக்கழக வளாகத்தில் பீரங்கி வைக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பீரங்கி வைப்பதன் மூலம் மாணவர்களுக்கு ராணுவத்தின் மீது மரியாதையும், தேசபக்தியும் அதிகரிக்கும் என்று கூறினார். இந்த கருத்துக்கு ஜேஎன்யூ மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துணைவேந்தரின் கருத்து, மாணவர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் என்றும், அது பல்கலைக்கழகத்தின் ஜனநாயக பண்பாட்டுக்கு அச்சுறுத்தலாகி விடும் என்றும் மாணவர்கள் கூறினர். பல்கலைக்கழகம் என்பது புத்தகங்களால் நிறைந்திருக்க வேண்டுமே தவிர டாங்கியால் அல்ல என்று அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com