இந்தியா
முல்லைப்பெரியாறில் புதிய அணை - தகவல் திரட்ட மத்திய அரசு அனுமதி
முல்லைப்பெரியாறில் புதிய அணை - தகவல் திரட்ட மத்திய அரசு அனுமதி
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான தகவல்களை திரட்ட கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்தார். சுற்றுச்சூழல் நிலை தாக்கம் பற்றிய ஆய்வு செய்ய கேரள அரசுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அப்போது, 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அரசாணையின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குறித்த அடிப்படை தகவலை சேகரிக்க தமிழகத்தின் அனுமதி தேவையில்லை மகேஷ் சர்மா விளக்கம் அளித்தார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.