மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா

மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய தல்கவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கெனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில் 43 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. இதுவரை சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ் குமார் கங்கவார்,  பாபுல் சுப்ரியோ, தாத்ரே சஞ்சய் சம்ராவோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திரா சரங்கி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகிய 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் பதவி விலகலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com