'உலகின் நம்பர் 1 பிரதமர்... மோடி தான்' - மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கருத்து

'உலகின் நம்பர் 1 பிரதமர்... மோடி தான்' - மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கருத்து
'உலகின் நம்பர் 1 பிரதமர்... மோடி தான்' - மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கருத்து

“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபர் வாழ்கையும் முன்னேற்ற வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்” என்று கூறுகிறார் மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே.

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரோஜ்கார் மேளா திட்டம் (வேலைவாய்ப்பு திருவிழாவை) என்ற பெயரில் பணி ஆணை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே 116 நபர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். சுங்கவரி, வருமான வரி, அஞ்சல் துறை, மத்திய மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்ட துறைகளை சார்ந்த நபர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, ''மத்திய அரசின் நோக்கம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருவதுதான். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாக இருக்கும் சூழலில், தற்போது இந்தியா பொருளாதார அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் உலக நாடுகளில் உள்ள பிரதமர்களில் நம்பர் 1ஆக நம் பிரதமரே இருக்கிறார்” என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “அரசு அலுவலகங்களில் பணி கிடைத்துள்ளதால் உங்கள் வாழ்க்கை முன்னேறும். இதன் மூலம் நாட்டுக்கு நீங்கள் சேவை செய்வதால் சமுதாயத்திலும் மாற்றம் ஏற்படும். மேலும் பணி கிடைத்து விட்டதால் பெற்றோர்களை நீங்கள் விட்டு விடக்கூடாது. அவர்கள்தான் சிறிய வயதில் இருந்து தற்போது வரை உங்களுக்காக பல தியகாங்களை செய்து உள்ளனர். திருமணம் ஆனாலும் பெற்றோர்களை கை விடக்கூடாது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com