union minister rajnath singh says on operation sindoor all parties meeting
அமைச்சர் ராஜ்நாத் சிங்pt web

"பாகி. தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Published on

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை எனினும், இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் வான் எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

union minister rajnath singh says on operation sindoor all parties meeting
அமைச்சர் ராஜ்நாத் சிங் முகநூல்

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியிருந்தது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது. என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது” என்றார்.

union minister rajnath singh says on operation sindoor all parties meeting
ஆபரேஷன் சிந்தூர் | துல்லியமான தாக்குதல்.. இந்திய வீரர்களைப் பாராட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com