பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர்... ’தூய்மை இந்தியா’ வை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தூய்மையை நோக்கி இந்தியா என மத்திய அரசு ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங். இவர் பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு காரில் இருந்து இறங்கி பொது இடத்தில் உள்ள சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். ராதாமோகன் சிறுநீர் கழிக்கும் போது போலீசாரும் பாதுகாப்பில் இருந்துள்ளார். அவர் இவ்வாறு செய்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, தூய்மை இந்தியா பேசும் அரசின் அமைச்சரே இவ்வாறு செய்வதா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு இலவசமாகவே அமைச்சர் விளம்பரம் செய்துள்ளார். இதற்கு எதற்கு கோடிக்கணக்கில் விளம்பரச் செலவு என்று ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாருங்க நரேந்திரமோடி சார் என்று இந்தக் காட்சியை மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.