மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய்
மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய்முகநூல்

குழாய் அடி சண்டை.. துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இரட்டையர்கள்..!

பிகார் மாநிலம் ஜகத்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் தங்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
Published on

மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் சகோதரரின் மகன்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய்
Headlines|வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரை!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரையொட்டி உள்ள நவுகச்சியா காவல் மாவட்டம் ஜகத்பூரை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் என்று கூறப்படும் ரகுநந்தன் யாதவ். இவருக்கு ரகுநந்தனுக்கு ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில்தான், நேற்றைய தினம் ( 20.3.2025) இரட்டையர்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் ஆகிய இருவருக்கும் குழாயடியில் தண்ணீர் பிடிப்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிதாக ஏற்பட்ட தகராறு பெரிய பூகம்பமாக வெடித்தது. கைக்கலப்பில் இறங்கிய இருவரை தடுப்பதற்கு அவர்களது தாயார் எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால், சண்டை நின்ற பாடில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய்
உழைத்து சம்பாதிக்கும் தகுதிவாய்ந்த பெண்கள்... ஜீவனாம்சம் கோரக்கூடாது - நீதிமன்றம் போட்ட உத்தரவு!

இதில் விகல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளார். இவர்கள் இருவரும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராயின் சகோதரர் மகன்கள் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கு என்ன காரணம் என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com