குதிரையேற்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி பதக்கம் வழங்கி பாராட்டு
சர்வதேச அளவில் நடைபெற்ற குதிரையேற்ற பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
சர்வதேச குதிரையேற்ற மேம்பாட்டு அமைப்பு மாணவர்கள் மத்தியில் குதிரையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஜூனியர்களுக்கான போட்டியில் மெட்ராஸ் ரைடர்ஸ் பயிற்சி மையத்தை சேர்ந்த மஹந்த் வெங்கடேசன் தேசிய அளவில் வெண்கல மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், மாற்றுத்திறனாளி பிரிவில் சென்னையை சேர்ந்த ஈஸ்வர் என்ற சிறுவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர்கள் இருவர் உட்பட மற்ற மாநிலங்களில் இருந்து போட்டியில் வென்றவர்களுக்கு டெல்லியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி பிரிவில் தங்கப்பதக்கம் ஈஸ்வர் கூறும்போது, குதிரையேற்றப் பயிற்சியில் அதிகமானோர் ஈடுபடுவது உள்ளபடியே மகிழ்ச்சி தருகிறது. குதிரையேற்றப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இந்த நிகழ்ச்சியில் குதிரையேற்றப் பயிற்சியாளர்கள் பங்களிப்பும் நிறைந்துள்ளது.