இந்தியா
WHO-ன் நிர்வாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!
WHO-ன் நிர்வாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்றார்.
உலக சுகாதார அமைப்பு 34 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகக் குழுத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷ்வர்தனை தேர்வு செய்தனர்.
இந்நிலையில் அவர் தனது உலக சுகாதார நிர்வாகக் குழுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை தொடரும்.