முதலமைச்சர் - மத்திய அமைச்சர்
முதலமைச்சர் - மத்திய அமைச்சர்முகநூல்

இந்தி திணிப்பு குறித்து பதிவிட்ட முதலமைச்சர்.. விமர்சித்த மத்திய அமைச்சர்!

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முதல்வர் ஸ்டாலினின் பதிவை விமர்சித்து பதிவு.
Published on

இந்திக்கு இடம் கொடுத்ததால், சில மொழிகள் இருந்த இடமே தெரியாமல் தொலைந்துவிட்டதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

“ ►இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி. தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.

► புந்தேல்கண்டி, போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, கர்வாலி மற்றும் குமோனி என மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது.

► இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, சந்தாலி, சத்தீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது.

► உ.பி, பீகார், ம.பி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. ” போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவைக் குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவில்,

”சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளை வைத்து, மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது. முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன கூறப்போகிறார். ஹிந்தி மொழி பேசும் தொகுதியை சேர்ந்த எம்பியான ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினின் கருத்தை ஏற்பாரா?.” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com