அமித் ஷா - இந்திய கொடிகோப்புப்படம்
இந்தியா
“ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மூலம் மூன்று குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்தனர்” - அமித்ஷா
காஷ்மீரில் மூவர்ண கொடி மட்டும்தான் பறக்கும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 370 சட்டப் பிரிவின் மூலம் 3 குடும்பங்கள் மட்டுமே பயனடைந்ததாக சாடியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு, இந்திய யூனியன் பிரதேசங்களாக அவை பிரிக்கப்பட்டது. அதன்பிறகு முதல் முறையாக அங்கு சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பரப்புரை களைகட்டி உள்ளது.
Jammu Kashmir electionpt desk
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ராம்பான் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரில் மூவர்ணக் கொடி மட்டும்தான் பறக்கும்” என திட்டவட்டமாக தெரிவித்தார். சிறப்பு அந்தஸ்து மூலம் முப்தி, காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூன்று குடும்பத்தினர் மட்டுமே பயன் அடைந்ததாகவும் அமித்ஷா சாடினார்.
ஜம்மு காஷ்மீர், தீவிரவாதத்தால் பற்றி எரிவதை விரும்பும் தரப்புக்கும், பாஜகவுக்குமான தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்