`ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்ககூடாது' - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

`ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்ககூடாது' - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
`ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்ககூடாது' - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

“உச்சநீதிமன்றம் ஜாமீன் மனுக்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்க கூடாது” என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரெஜிஜு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

புதுடெல்லி சர்வதேச நடுவர் மையத்தை இந்திய சர்வதேச நடுவர் மையம் என பெயர் மாற்றம் செய்யும் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பொருத்தமான வழக்குகளை மட்டும் நீங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் - என உச்ச நீதிமன்றத்திற்கு நான் சில கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக ஜாமீன் மனுக்கள் மற்றும் அற்பமான பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கினால் அது நீதிமன்றத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். நான்கு கோடிக்கும் அதிகமான வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் யாருக்கு நீதி தேவைப்படுகிறதோ அதை கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதை குறித்து விமர்சித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “சட்டத்துறை அமைச்சருக்கு குடிமக்களுக்கு இருக்கக்கூடிய தனி உரிமை குறித்து ஏதாவது தெரியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி, “ஜாமீன் குறித்த நீதி அரசர் கிருஷ்ண அய்யரின் கருத்துக்களை சட்டத்துறை அமைச்சர் படித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை விசாரிக்க கூடாது என சட்டத்துறை அமைச்சர் எப்படி சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சல்மான் குறிச்சி, “நீதித்துறையை குறைவாக செயல்படும் அமைப்பாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது” என்று விமர்சித்துள்ளார். ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் தொடர்பான கருத்துக்களுக்கு மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தை சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com