சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுன்டர் நடந்த இடத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில், சுக்மா பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய இடத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜகதல்பூரில் வைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாஹலும் அஞ்சலி செலுத்தினார்.