"போதிய மருந்துகளை கையிருப்பில் வச்சுக்கோங்க” - பரவும் காய்ச்சலும் அரசின் எச்சரிக்கையும்

"போதிய மருந்துகளை கையிருப்பில் வச்சுக்கோங்க” - பரவும் காய்ச்சலும் அரசின் எச்சரிக்கையும்
"போதிய மருந்துகளை கையிருப்பில் வச்சுக்கோங்க” - பரவும் காய்ச்சலும் அரசின் எச்சரிக்கையும்

வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால் போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில், சமீப காலங்களாக நாடு முழுவதும் இன்புளுயன்சா H3N2 வைரஸ் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் சில மாநிலங்களில் கொரோனோ நேர்மறை விகிதங்கள் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளதை கவனிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் அதிகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜனவரி 1ம் தேதி முதல் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 25.4% பேருக்கு அடினோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் தேவையான அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை கையிருப்பில் வைத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com